நிகழ்வுகள்மலையகம்

தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பை ஈட்டி தருவதற்கான நேர்முக பரீட்சை கொட்டக்கலை CLF வளாகத்தில் ..

தொழில் வாய்ப்பை எதிர்பார்க்கும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பை ஈட்டி தருவதற்கான நேர்முக பரீட்சை இன்றும், நாளையும் கொட்டக்கலை CLF வளாகத்தில் இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறுகின்றது.

மேலும் தனியார் துறைகளில் தொழில் புரிய விரும்பும் விண்ணப்பதாரிகள் இந்த நேர்முக பரீட்சையில் இணைந்துக்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் இளைஞர் அணி வழிவகுத்துள்ளது.

இதன்போது வருகைதந்திருந்த விண்ணப்பதாரிகளின் கல்வி தகைமைக்கு ஏற்ப   தொழில் துறைகளுக்கு நேர்முக தெரிவு இடம்பெறுகின்றது.

இன்று ஆரம்பமான முதல் நாள் நேர்முக தேர்வில்  600 ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com