சிறப்புசெய்திகள்

தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்களையும் ,காணொளிகளை ஒளிப்பரப்புவதற்கு தடை..?

தனியார் பஸ்களில், பயணிகள் அசௌரியங்களுக்குள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிப்பரப்புவதற்கும், காணொளிகளை ஒளிப்பரப்புவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து,பயணிகள் தமது முறைபாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் முறைபாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button