செய்திகள்

தனியார் பஸ் பொலிஸாரினால் மடக்கிப் பிடிப்பு.!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மீறி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸினை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இன்று காலை கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி பஸ்ஸானது பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த 38 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வைபவங்கள் மற்றும் நபர்கள் ஒன்று கூடுவது தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வலியுறுத்துகின்றனர். திருமண பதிவுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் 10 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

Related Articles

Back to top button