சமூகம்
தனியார் மேலதிக வகுப்பொன்றில் பாடசாலை மாணவி நடத்த சோகம்
சிலாபத்தில் ஆசிரியை ஒருவர் தனியார் மேலதிக வகுப்பொன்றில் பாடசாலை மாணவியொருவரை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 29ம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், ஆசிரியை நேற்று சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளன மாணவி சிலாபம் – வட்டக்கல்லிய பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், 23 வயதுடைய பாடசாலை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.