செய்திகள்

தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவனைக் காணவில்லை-யட்டியாந்தோட்டையில் சம்பவம் !

யட்டியாந்தோட்டை- புனித மரியாள் தேசியக் கல்லூரியில் தரம் 11இல் கல்விப் பயிலும் புஷ்பராஜ் கிஷோத்திரன் எனும் மாணவன் நேற்றிலிருந்து காணாமல் போயுள்ளார்.

நேற்று முன் தினம் (21) தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற இம்மாணவன், இன்னும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்தனர்.

எட்டியாந்தோட்டை- மீபிட்டிகந்த தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவனைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0776146216, 0783761663 மற்றும் 0714148152 ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button