...
செய்திகள்

தனியார் வங்கிக்குள் துப்பாக்கி பிரயோகம் : யுவதி ஒருவர் காயம்

நாரம்மல பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில், யுவதியொருவர் காயமடைந்துள்ளார்.

தனியார் வங்கியில் கடமையாற்றும் 20 வயதான யுவதியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த யுவதி, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை அடுத்து, வங்கியின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Back to top button


Thubinail image
Screen