மலையகம்

தனி மனிதனாக நின்று தமிழ் பாடசாலையை உருவாக்கியவர் அமரர் ராஜலிங்கம்-ஊடகவியலார் வரதன் கிருஸ்ணா

மலையக காந்தி என அழைக்கப்பட்ட முன்னை நாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜலிங்கம் அவர்கள் மறைந்து 55 வருடங்களுக்கு பின்னர், அவர் தொடர்பான நூல் ஒன்று தமிழகத்தில் இருந்து வெளியாகியுள்ளது, புஸ்ஸல்லாவை சங்குவாரி தோட்டத்தில் பிறந்த அவர், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்டு மலையகத்தில் இருந்து தெரிவான ஏழு உறுப்பினர்களில் ஒருவர், 60 வருடங்களுக்கு முன்னரே அவர் மனதில் உதித்த ஒரே குறிக்கோள் புஸ்ஸல்லாவையில் ஒரு தமிழ்ப்பாடசாலை உருவாவதுதான். எனவே அவரின் இடைவிடாத முயற்சியின் விளைவாக உருவெடுத்ததுதான் சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், இன்று அது சரஸ்வதி கல்லூரியாக உருவெடுத்து பல ஆயிரக்கணக்கான கல்விமான்களை உருவாக்கியுள்ளது.

வாழும் காலத்தில் ஒருவர் தனது சமூகரீதியாக செய்யும் நற்செயல் என்பது அவரது மரணம் கடந்தும் அவரை வாழவைத்துக்கொண்டே இருக்கும், தலைவன் என்பவன் உண்மையில் மக்கள் சேவகன்தான் என்ற நினைப்பு இப்போது உள்ளவர்களுக்கு வந்து தொலைப்பதே இல்லை, காரணம் நாம் சமூகசேவகனை தலைவனாக தேர்ந்து எடுப்பதில்லை, தில்லு இருந்தா மோதிப்பார்” என்ற ஆணவத்துடன் எமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் ஒரு அரசியலை செய்கிறோம், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலையகத்தில் பல்கலைக்கழகம் என்ற விடயத்தை வாய் கூசாமல் சவடால்” விட்டவர்கள் இன்று மௌனித்து போய் இருக்கின்றனர், இதைவிட 500 மில்லியன் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பூண்டுலோயா அல்லது நாவலப்பிட்டி கெட்டப்புலாவில் இதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது ஆனால் தனி ஒரு மனிதனாக 60 வருடங்களுக்கு முன்னர் எந்தவித அரச உதவியும் இன்றி ஒரு பாடசாலையை அமைத்த ராஜலிங்கம் ஒரு மகாபுருஷராக நாம் கருத வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button