செய்திகள்

தன்னை கைது செய்யவில்லை சாதாரணமாக விசாரித்தார்கள் – ரிப்கான் பதியூதீன் தெரிவிப்பு!

அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவர் சிற்றூர்ந்துடன் கைது செய்யப்பட்டு, விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார். இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், காவற்துறையிடம் பொறுப்பளிக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் வினவிய போது.. “என்னை பொலிஸார் கைது செய்யவில்லை, அனைத்து பொது மக்களையும் விசாரணை செய்வது போல் என்னையும் விசாரித்தார்கள், அவ்வளவுதான். கைது செய்து விடுதலை செய்யப்பட்டதாக வெளியான செய்தி பொய்யானதாகும்”அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com