உலகம்செய்திகள்

தன் உயிரை பொருட்படுத்தாமல் கொரோனா தொற்றாளர்களை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது வயது, உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளர்களை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த விவகாரத்தில், தான் ஏன் பிபிஇ கிட் அணிந்து வார்டுக்குள் சென்றேன் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவு:

” #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!”

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த நேரத்தில் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனைக் குழுவுடன் ஆலோசனை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதனிடையே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள், நேரடியாக மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது என கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியை செய்து வருகிறார். இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது. இதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று கோவைக்கு நேரில் சென்ற அவர் ஆய்வு நடத்தியுள்ளார்.

Image
Image
Image

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com