அரசியல்செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு இன்றும்..

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் இடம்பெறவுள்ளது.

பொலிஸார், தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் இன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டத்தின் முதல் நாளான நேற்றைய தினம், சுமூகமான முறையில் நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் முதற்கட்டம் கடந்த 31 ஆம் திகதியும் முதலாம் திகதியும் நடைபெற்றது.

குறித்த நாட்களில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் எதிர்வரும் ஏழாம் திகதி தாம் கடமையாற்றும் இடத்திற்கு அருகிலுள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூலம் வாக்குகளை அளிக்க முடியும்.

தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் பகுதிகளில் நிழற்படங்களை எடுப்பதற்கும், காணொளிகளை எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனைகள் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

Related Articles

Back to top button