செய்திகள்

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இது தொடர்பாக தெரிவிக்கையில், தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை பொறுப்பேற்பதற்கு தற்பொழுது சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அறிவிப்பு ஆவணம் தபால் திணைக்களத்திடம் எதிர்வரும் 25 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.

இவற்றை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தபால்மா அதிபர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வு வாக்காளர் அறிவிப்பு அட்டை விநியோகிப்பதற்கான விஷேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button