செய்திகள்

தபால் மற்றும் பயணிகள் ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

தபால் ரயில் சேவை மற்றும் பயணிகள் ரயில் சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

தபால் ரயில்சேவை இடைநிறுத்தப்பட்டமையினால் தபால் மற்றும் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லையென மத்திய தபால் பரிமாற்றகம் தெரிவித்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்றகத்தின் வாகனங்களைப் பயன்படுத்தி உரிய நேரத்தில் தபால்கள் மற்றும் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரிமாற்றகத்தின் அத்தியட்சகர் அஸ்லம் ஹசன் தெரிவித்தார்.தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால்கள் மற்றும் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com