அரசியல்செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் வௌியானது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இராணுவத்தினர் எதிர்வரும் 30 ஆம் திகதி வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகம் , தேர்தல்கள் திணைக்களம் என்பவற்றில் இவர்கள் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடுத்த மாதம் 4 ஆம் திகதி தமது தபால் மூல வாக்கினை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் மற்றும் அரச ஊழியர்களை போலவே பொலிஸ் உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலகம் , தேர்தல்கள் திணைக்களம் என்பவற்றில் தமது தபால் மூல வாக்கினை அளிக்க முடியும்.

குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு அடுத்த மாதம் 07 ஆம் திகதி மீண்டும் தமது வாக்கினை அளிப்பதற்கான வாய்ப்பு தேர்தல்கள் திணைக்களத்தால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download