செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு இன்றும் சுமூகமான முறையில்..

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் சுமூகமான முறையில் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இன்று முற்பகல் 8.30 க்கு ஆரம்பமாகிய தபால்மூல வாக்களிப்பு மாலை 4.15 க்கு நிறைவடைந்துள்ளது.

பொலிஸ் திணைக்களம், மாவட்ட மற்றும் தேர்தல் செயலக அதிகாரிகள் இன்று வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

இன்று தபால்மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு நாளை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட தபால் மூல வாக்களிப்பு கடந்த 31 ஆம் திகதியும், இம்மாதம் முதலாம் திகதியும் நடைபெற்றது.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஆறு இலட்சத்து 59 ஆயிரத்து 504 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button
image download