செய்திகள்

தபால் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம்

தபால் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவிக்கின்றது. தபால் ரயில் மற்றும் தபால் பஸ் சேவைகள் இடம்பெறாமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, திணைக்களத்தின் வேன்கள் மற்றும் லொறிகள் கடிதங்கள் மற்றும் பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கடிதங்களை பிரித்தெடுக்கும் மத்திய நிலையங்களில் இரவு நேர பணி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button