சமூகம்செய்திகள்

தப்பியோடிய கொரோனா நோயாளி கைது.

ஹெந்தலையை சேர்ந்த ஜாஎல பிரதேசத்தில் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் நபரொருவர் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின் தொற்றாளரென உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனைவியுடன் தப்பியோடிய சந்தர்ப்பத்தில் கொஸ்வத்தை-பொத்துவடன பிரதேசத்தில் வைத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் அவரது மனைவி சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அதன் பின் அவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார்.


Related Articles

Back to top button
image download