அரசியல்செய்திகள்

தமது உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் வாகனங்களை இதுவரை திருப்பி வழங்காத முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய அறிவித்தல் …

தமது உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் வாகனங்களை இதுவரை திருப்பி வழங்காத முன்னாள் அமைச்சர்களுக்கு,அவற்றை விரைவாக திருப்பி வழங்குமாறு கடிதம் மூலம் பொது நிருவாக அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சுக்களுக்கான செயலாளர்களினதும் வீடுகளையும், வாகனங்களையும் திருப்பி கையளிக்க வழங்க முன்னாள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் தாமதமாகும் பட்சத்தில் தற்போதைய அமைச்சர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் அவர் கூறியுள்ளார்.

புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களையும் வாகனங்களையும் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் சுட்டக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button