மலையகம்

தமது கனவு நனவாகவில்லை : ஆறுமுகன் தொண்டமான் கவலை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடு இன்றி நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாளிமார் சம்மேளனம் 100 ரூபாய் சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் அதற்கு தாம் இணங்கப் போவதில்லை என தொழிற்சங்க பிரதிநிதகள் தெரிவிக்கின்றனர்.

பொழும்பு , ராஜகிரியவில் நேற்று மாலை இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரையாடலின் பின்னர் அதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பிரதித் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடு இன்றி நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்போது, கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்,

இன்றைய கூட்டமும் இணக்கப்பாடு இன்றி நிறைவுக்கு வந்துள்ளது.அடிக்க அடிக்க அம்மியும் நகரும் எனவும் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக மாற்றியே தீருவோம்.

எவ்வாறாயினும், தீபாவளிக்கு முன் சம்பள அதிகரிப்பு எனும் தமது கனவு நனவாகவில்லை என்பது தொடர்பில் தாம் கவலை கொள்கின்றேன். அழுத்தங்கள் ஊடாக சம்பள அதிகிரிப்பு என்பது சாத்தியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போராட்டங்கள் ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொழுந்து பறிக்கும் அளவுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனும் கோரிக்கையையும் தாம் நிராகரிப்பதாகவும் அரசியல் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button