...
உலகம்

தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் 9 வயது சிறுமி எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பாச்சலூர் பகுதியில் 9 வயது மாணவியொருவர் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாச்சலூரில் உள்ள அரச பாடசாலையொன்றில் 9 வயதான பிரித்திகா 5 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (15) காலை 11 மணியளவில் பிரித்திகா வகுப்பறையைவிட்டு வெளியே சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதன்பின்னர் அவர் வகுப்பறைக்குத் திரும்பாததால் அவரை மாணவர்களும் ஆசிரியர்களும் தேடியுள்ளனர்.

அதன்போது, பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் தீயில் எரியுண்டு கருகிய நிலையில் பிரித்திகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மாணவியின் தந்தை சடலத்தை இனங்கண்டுள்ளார். இதனையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அதனை அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமியை எவரேனும் எரித்துக் கொலை செய்தனரா? அல்லது இது தற்செயலான விபத்தா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen