உலகம்

தமிழகத்தில் துப்புரவு பணிகளுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பம்!

தமிழகத்தின் கோயம்புத்தூரில் துப்புரவு பணிகளுக்காக ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

நேர்காணலில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்களும், பொறியியல் பட்டதாரிகளும் பங்குபற்றியிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவை மாநகராட்சியில் பணிபுரிய நிரந்தர துப்புரவு பணிக்கான 549 பணியிடங்களை நிரப்புவதற்கான  நேர்காணல், கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

சுமார் 7000க்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 இடங்களில் குப்பைகளை சேகரிப்பது, அதனை தரம் பிரித்து, குப்பைக்கிடங்கு அலுவலகர்களிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் துப்புரவு பணிக்குள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button