உலகம்செய்திகள்

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு.!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு நாளை 12ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணியுடன் முடிவடையவிருந்த நிலையில், 19ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, ஊரடங்கை நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனடிப்படையில்,

  • வர்த்தக நிலையங்களைத் திறந்திருப்பதற்கு மேலதிகமாக ஒரு மணித்தியாலம் வழங்கப்பட்டுள்ளது.
  • உணவகங்கள், தேநீர் கடைகள், வெதுப்பகங்கள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 வீதமான வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
  • புதுச்சேரிக்கான பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், புதுச்சேரி தவிர ஏனைய மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் பரீட்சைகளை, சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • திரையரங்குகளைத் திறப்பதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
  • திருமண நிகழ்வுகளில் 50 நபர்களும், இறுதிச்சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பாடசாலைகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், மதுவருந்தும் நிலையங்கள், நீச்சல் தடாகங்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கும், பொதுமக்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களையும், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button