தமிழக மீனவர்கள் 27 பேர் கைது.!

எல்லையை மீறி மீன் பிடியில் ஈடுபட்ட 27 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு தென் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 4 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கைது செய்யப்பட்ட 27 மீனவர்களையும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மீனவர்கள் இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கூறல்மீன்கள் அதிகளவில் இந்த பகுதியில் இருந்ததால் அதனை பிடித்து கொண்டிருந்த போது, காற்றின் வேகம் காரணமாக எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.