உலகம்

தமிழனின் வீரத்தை காண தமிழகம் வருகிறார் புட்டின்!

தமிழனின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியினைக் கண்டுகளிக்க எதிர்வரும் ஜனவரி மாதம்  ரஷ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புடின் அலங்கா நல்லூருக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் உலகப்புகழ் பெற்றதாக   மதுரை அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி திகழ்கின்றது.

இப்போட்டியை நேரி ல் காண பாரத பிரதமர் நரேந்திர மோடி , ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் எதிர்வரும் ஜனவரி  மாதம் தமிழகம் வரவுள்ளனர்.

இதன்மூலம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,  மேலும் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

 இந்த சந்திப்பு உலகம் முழுவதும் கவனத்தைப் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி தமிழகம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button