செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக செய்திகளை பரப்பிய நபர் கைது.!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவுகளை எழுதியமைக்காக, திருகோணமலையில் 24 வயதான வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்பு பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் முச்சக்கர வண்டி சாரதியான சந்தேக நபர், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Back to top button