செய்திகள்பதுளைமலையகம்

தமிழ்நாட்டு அரசாங்கம் வழங்கிய நிவாரணப் பொதிகள் ஹப்புத்தளையை வந்தடைந்தது.

இந்திய தமிழ்நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் நேற்று காலை 10 மணிக்கு ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் 4500kg அரிசி பொதிகள் இறக்கப்பட்டது.

ஹல்தும்முல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக குறித்த அரிசி பொதிகள் இரக்கப்பட்ட குறிப்பிடத்தக்கது.

குறித்த இடத்திற்கு வருகை தந்த ஹல்தும்முல்ல பிரதேச செயலாளர். இதில் கலந்து கொண்டனர்.

குறித்த பகுதிகளில் உள்ள தோட்டப்புறங்களுக்கு நேற்றைய தினம் பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ராமு தனராஜா

Related Articles

Back to top button