செய்திகள்

தமிழ்மொழி புறக்கணிப்பு: விமர்சனத்தை அடுத்து அகற்றப்பட்ட பெயர்ப்பலகை !

(ராகவ்)

சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் திறக்கப்பட்ட குறித்த பெயர் பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் இடம்பெற்றிருந்தபோதும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கவனக்குறைவு காரணமாக பெயர்பலகையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே குறித்த பெயர்ப்பலகை மீண்டும் சரிசெய்யப்பட்டு மாற்றப்படும் என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.

Related Articles

Back to top button