செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்” எனும் தொனிப்பொருளில், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், நல்லூர் – நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்கவேண்டும். நாங்கள் எமது குடும்ப உறவுகளுடன் கூடி வாழ வேண்டும். தொடர்ந்து ஏமாற்றாதே! துரோகம் செய்யாதே. கைதிகளது உறவுகளின் வலியை புரிந்து கொள்ளுமாறும் பாதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் நாடாளுமற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும் த.சித்தார்த்தன், மதத் தலைவர்கள், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button