மலையகம்

தமிழ் நாட்டு அரசியலிலும் தொண்டமான்

அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நீக்கப்பட்டுள்ள தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளீடு செய்வதற்கு இந்திய பிரதமர் தலையீடு செய்ய வேண்டும் என மஸ்கெலியா லக்ஷபான தோட்ட தொழிலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது.

மலையக மக்களுடைய உந்துதல் சக்தியாக செயல்பட்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை அங்கிருந்து நீக்கியமை தவறான விடயம் என இலங்கை அரசாங்கத்தின் குறித்தி அமைச்சின் செயல்பாட்டை கண்டித்து தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீக்கப்பட்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளிட வேண்டும் என வழியுறுத்தி மஸ்கெலியா லக்ஷபான தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.இதன்போது இந்திய தமிழ்நாட்டு தலைவர்கள் பலருக்கு நன்றிகள் தெரிவித்ததோடு, தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

 

Related Articles

70 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button