அரசியல்

தயாசிறிக்கு சந்திரிக்கா கூறியுள்ள முக்கிய ஆலோசணை.

தனிப்பட்ட தேவைகளுக்குள் மட்டுப்பட்டு பெறுதியான கட்சி சீரளிவதற்கு இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

ஸ்ரிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவுக்கே அவர் அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தை குறிப்பிட்டு ,தயாசிறி ஜெயசேகரவுக்கு கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

கட்சியின் 90 சதவிகிதமானவர்கள் ஸ்ரிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை சுதந்திரக்கட்சியை முழுமையாக தாரைவார்க்கும் செயற்பாடு என அவர் கூறியுள்ளார்.

கட்சியின் தலைவர் பதவியை உதறி தள்ளிவிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வௌியேறுவாராக இருந்தால்,கட்சியின் தலைவர் பதவியை பொறுப்பேற்க தயாசிறி ஜெயசேகர முன்னிற்பாராக இருந்தால் அவருக்கு தனது முழுமையான ஆதரவை வழங்வதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

Related Articles

Back to top button