
மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்களை வழங்கும் வகையில் 27 அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டதோடு குறித்த சதொச களஞ்சியசாலைகளை சோதனையிடும் நடவடிக்கை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெலிசர, பூஸ்ஸ, குருணாகல், வெயாங்கொடை மற்றும் இரத்மலானை உட்பட அநேக பகுதிகளில் அமைந்துள்ள சதொச களஞ்சியசாலைகள் இவ்வாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நேற்றைய தினம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
தரமான தயாரிப்புகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் பந்துல குணவர்தன இவ்விஜயத்தின்போது தொிவித்தார்.