செய்திகள்

தரமான முகக்கவசங்களை குறைந்த விலையில் சதொச கிளைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை ..

சதொச கிளை வலைப்பின்னல் அடங்கலான இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் 15 ரூபாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும் இன்று (21) தொடக்கம் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

சதொச நிறுவனத்திற்கு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் வர்த்தக அமைச்சர் உரையாற்றினார். இந்நிகழ்வு சதொச தலைமையகத்தில் இடம்பெற்றது.

அடுத்த வாரம் தொடக்கம் தொற்று நீக்கிகளையும் குறைந்த விலைக்கு விநியோகிக்கப் போவதாக அமைச்சர் கூறினார். 2021ஆம் ஆண்டு தொடக்கம் இளம் தொழில் முயற்சியாளர்கள் ஆயிரம் பேரை இணைத்துக் கொண்டு, மக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய ஆயிரம் கியூஷொப் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related Articles

Back to top button