செய்திகள்

தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஆசிரியரால் பாலியல் வல்லுறவு ?.

மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய இளம் ஆசிரியர் புத்தள பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தள பகுதியின் குடாஓய மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி மேலதிக வகுப்புக்கு சென்ற வேளையிலேயே குறித்த ஆசிரியரால் பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த விடயத்தை தனது தாயிடம் முறையிட்டதை அடுத்து தாய் புத்தள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.பி. பலிஹேனவிடம் புகார் செய்துள்ளார்.

இப் புகாரின் பேரில் புத்தளைப் பொலிசார் குறிப்பிட்ட இளம் ஆசிரியரைக் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினது வைத்திய அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு புத்தளை அரசினர் வைத்தியசாலையில் மாணவியை அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button