...
மலையகம்விளையாட்டு

தெற்காசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கைக் குழாத்தில் குமார் சண்முகேஸ்வரன் இடம்பிடிப்பு.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 6 தெற்காசிய நாடுகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண தெற்காசிய நகர்வல சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் உள்ள கொஹீமாவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்தப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் கடந்த மாதம் தியகமவில் விசேட தகுதிகாண் போட்டியொன்று நடத்தப்பட்டது.

ஆண், பெண் இருபாலாருக்குமாக நான்கு வயதுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களை தெற்காசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 33.23 நிமிடங்களில் நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவர் இறுதியாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டரில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட இந்தப் போட்டியில் 3000 மீட்டர் தடை தாண்டல் தேசிய சம்பியனான ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார (32.09 நிமி.) முதலிடத்தையும், ஆர். விஜேவிக்ரம (32.10 நிமி.) இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, தெற்காசிய நகர்வல சம்பியன்ஷிப் தொடருக்காக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை வீரர்கள் விபரம் பின்வருமாறு:

பெண்கள் – (சிரேஷ்ட பிரிவு)

  1. மதுமாலி பெரேரா (இலங்கை கடற்படை – 39.22 நிமி.)
  2. எச்.எம்.டபிள்யூ ஹேரத் (இலங்கை இராணுவம் – 39.40 நிமி.)
  3. எம். நிமேஷா (இலங்கை இராணுவம் – 39.41 நிமி.)

ஆண்கள் (சிரேஷ்ட பிரிவு)

  1. ஆர்.எம்.எஸ். புஷ்பகுமார (இலங்கை இராணுவம் – 32.09 நிமி.)
  2. எஸ்.ஆர்.டபிள்யூ விஜேவிக்ரம (இலங்கை இராணுவம் – 32.10 நிமி.)
  3. கே. சண்;முகேஸ்வரன் (இலங்கை இராணுவம் – 32.23 நிமி.)

பெண்கள் – (06 கிலோமீட்டர்)

  1. கே.எம் ஜாலிய சகீத் துலக்ஷன மதுஷான் (28.59 நிமி.)
  2. அஞ்செலோ பெனடிக்ட் (29.05 நிமி.)
  3. ஏ.பி.சி. மதுபாஷன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen