செய்திகள்

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள இராமகிருஷ்ண மிஷன்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில், கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் சுவாமி இருவர் மற்றும் 45 மாணவர்கள்  உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி இ.உதயகுமார் தெரிவித்தார்.

இதனையடுத்து,  இராமகிருஷ்ண மிஷன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நேற்று பல பகுதிகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார்.
இதன்போது, மாமாங்கம் பகுதியில் 21தொற்றாளர்களும், புளியந்தீவு பகுதியில் 09 தொற்றாளர்களும், நாவற்குடா கிழக்குப் பகுதியில் 12 தொற்றாளர்களும், மஞ்சந்தொடுவாய் பகுதியில் 06 தொற்றாளர்களும், இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Back to top button