செய்திகள்

தற்கொலைதாரிகளின் பெயர் விபரங்கள் இதோ !!!

கடந்த வெள்ளிக்கிழமை (21) நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த தற்கொலை தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.

அத்துடன் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளில் ஒரு பெண் அடங்குவதாகவும் இருவர் பட்ட படிப்பை லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் மேற்கொண்டுள்ளரெனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

தற்கொலைதாரிகளின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் காணொளிகள் சர்வதேச ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன.

அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அடங்குகின்றனர். அதிலொரு தற்கொலை குண்டுதாரியின் மனைவி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலைசெய்து உயிரை மாய்த்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து ஐ.எஸ். அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பல்வேறு தாக்குதல்களை ஏற்படுத்தி இலங்கையில் சுமார் 1000 பேர் வரையில் கொலைசெய்யவும் காயப்படுத்தவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது.

தற்கொலைத் தாக்குதலில் உபைதா, அல்-முக்தர், ஹலீல், ஹம்ஷா, அல்-பரா, முஹம்மட், அப்துல்லா ஆகிய 7 பேர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஹம்ஷா என்ற தற்கொலைதாரி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில்  தற்கொலைத்தாக்குதலையும் கலீல் என்ற தற்கொலை தாக்குதல்தாரி நீர்கொழும்பு புனித செபஸ்ரியன் ஆலயத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button