செய்திகள்

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை புதைக்க காலக்கெடு.?

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் தற்கொலை குண்டுதாரியான முகமட் அசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சனைகள் எதுவும் இன்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கட்டளையிட்டுள்ளார்.

குறித்த தற்கொலை குண்டு தாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரின் வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

இதன்போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கம் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

இதன்போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கம் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை 26 த் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்பு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download