விளையாட்டு

தற்போதைக்கு ஓய்வு இல்லை – அறிவித்தார் கெய்ல்.

கிரிக்கெட்டில் தற்போதுள்ள நிலையில் ஓய்வு எனும் பேச்சுக்கே இடமில்லை ,
இன்னும் இரண்டு உலகக்கிண்ணங்களில் விளையாடுவேன் என மேற்கிந்தியதீவுகள் அணியின்
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதே அரங்கிலிருந்து ஓய்வு
பெறப் போவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்திருந்தார்.

எனினும் அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுடனான சர்வதேச ஒருநாள்
தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து விளையாடியிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிறைவுக்கு வந்த ஐ.பி. எல்
கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் மாத்திரமே கிறிஸ் கெய்ல்
விளையாடியிருந்தார்.

எவ்வாறாயினும் கெயிலின் வருகைக்கு பின்னரே ஐ.பி. எல் போட்டிகள்
களைக்கட்டிருந்தன.

தொடரில் 3 அரைசதங்களுடன் 288 ரன்கள் குவித்திருந்தார்.

இந்நிலையில் 2021ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20
உலகக்கிண்ணம் மற்றும் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண
தொடர்களில் தான் விளையாடுவேன் என கிறிஸ் கெய்ல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download