செய்திகள்நுவரெலியாமலையகம்

தலவாக்கலையில் இன்று எரிபொருள் விநியோகம்; முந்தியடிக்கும் வாகன சாரதிகள்.

ஆர்கே

தலவாக்கலை நகர மத்தியிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கடந்த ஒரு வாரமாக எரிபொருள் கிடைக்கவில்லை‌ என தெரிவித்து, நேற்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிலையத்தில் இன்றைய தினம் (23.06.2022) எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதால் வாகன சாரதிகள் முந்தியடிக்க முயற்ச்சிப்பதால் வரிசையில் காத்திருப்போர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் எரிபொருள் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் வைத்து வரிசையில் காத்திருக்கும் சாரதிகளுக்கு எரிபொருள் வாங்க செல்வதற்க்கான வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் விநியோகம் குறைவடைந்துள்ள நிலையில் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button