நுவரெலியாமலையகம்

தலவாக்கலையில் கார்-மோட்டார் சைக்கிள் விபத்து.

தலவாக்கலை பொலிஸ் பிரிவித்திற்குட்பட்ட தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் பிரதான வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரதெல்லயில் இலிருந்து தலவாக்கலை நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும், தலவாக்கலை நகரிலிருந்து வந்துக்கொண்டிருந்த மோட்டார் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்ததுடன் அவர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com