செய்திகள்நுவரெலியாமலையகம்

தலவாக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இன்றையதினம் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மக்கள் மீது குறித்த தோட்டத்திற்கு செல்லும் வீதியில் காணப்பட்ட குளவிக்கூடு அதன் காரணமாக குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

இன்று பகல் இரண்டு முப்பது மணி அளவில் இக்கொட்டுச் இடம்பெற்றுள்ளது.

இதில் பலரும் கொட்டுக்கு இலக்கான போதிலும் தற்போது குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் தொடந்தும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு மாணவர்களும் அடங்குவதாக வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

குளவி கொட்டில் பாதிக்கப்பட்டவர்களை அவசர ஆம்புலன்ஸ் மற்றும் முச்சக்கர வண்டிகள் மூலம் பிரதேச மக்களின் துணையுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

– கௌசல்யா

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com