தலவாக்கலை கட்டுகலை பகுதியில் கேரள கஞ்சாவோடு அறுவர் கைது..
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுகலை பகுதியில் கேரள கஞ்சா போதை பொருளுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது வியாழக்கிழமை 14/03/2019 அன்று இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தலைமையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக தோட்ட பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட கலால் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும்,மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளும் இன்று 15/03/2019 நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தோட்டப்பகுதிகளுக்கு கஞ்சா விநியோகிப்பவர்களையும் இனங்கண்டு அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார்.