மலையகம்

தலவாக்கலை க்ரேட் வெஸ்ட்டன் மலையில் மண்சரிவு : மக்கள் அச்சம்

தலவாக்கலை – க்ரேட் வெஸ்ட்டன் தோட்டத்தின் லுவிசா பிரிவு மக்கள் மண்சரிவு அச்சத்தால் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

க்ரேட் வெஸ்ட்டன் மலையில் இருந்து நேற்று இரவு 11மணியளவில் சிறிய மண்சரிவு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளதுடன்,200இற்கும் அதிகமான குடும்பங்கள் அங்குள்ள ஆலயம் ஒன்றில் தங்கியுள்ளனர்.

எனினும் அவர்கள் தற்போது தங்களது இடங்களுக்கு செல்ல ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com