நுவரெலியாமலையகம்

தலவாக்கலை – ட்ரூப் தோட்ட ஆலயத்திற்கு ஒரு தொகை நிறப்பூச்சுக்கள் வழங்கி வைப்பு.

தலவாக்கலை – ட்ரூப் தோட்ட தலைவர்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் இளைஞர்களின் வேண்டுகோளுக்கமைய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படடு வரும் குறித்த தோட்டத்தின் ஆலயத்திற்கு ஒரு தொகை நிறப்பூச்சு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த தோட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆலய பரிபாலன சபையினர் ஆலயத்திற்கான உதவிகளை செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் தனிப்பட்ட நிதியிலிருந்து குறித்த ஆலயத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் ஒருதொகை நிறப்பூச்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் பிலிப் மற்றும் பிரதேச தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்களான ரவிச்சந்திரன், சந்தானம் கிரே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button