மலையகம்

தலவாக்கலை திடீரென தீ பரவல்: இரண்டு வியாபார நிலையங்கள் முற்றாக சேதம்

தலவாக்கலை பிரதான நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வியாபார நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை எனவும் பொருட்கள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதேச பொது மக்கள், தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை லிந்துலை நகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் மின்சார ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com