மலையகம்

தலவாக்கலை நடைபாதை வியாபாரிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி!

தலவாக்கலை நகரில் நடைபாதை வியாபார கடைகள் அமைப்பதாக உத்தியோகபூர்வ முடிவு எடுக்கபட்டுள்ளதாக தலவாக்கலை நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தீபாவளி பண்டிகை தொடர்பான தலவாக்கலை ஐக்கிய வர்த்தக சங்க ஒன்று கூடல் லிந்துலை நகரசபையில் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஒன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இம்முறை வித்தியாசமான முறையில் யாருக்கும் பாரபட்சமின்றி தலவாக்கலை நகர் மத்தியில் நடைபாதை வியாபார கடைத்தொகுதிகள் வழங்க உள்ளது.

ஒரே சமனான 300 கடைத்தொகுதிகள் பிரிக்கப்பட்டு அதற்காக எதிரவரம் 25ம் , 30ம் திகதிக்கும் இடையில் முன்கூட்டியே பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், ஒருவருக்கு ஒரு பதிவே ஏற்றுக்கொள்ளப்படும். கடைத்தொகுதிகளின் இடங்கள் அனைத்தும் குழுக்கள் முறையிலே தீர்மானிப்பபடும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

53 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button