மலையகம்
தலவாக்கலை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இந்திய அரசாங்கத்தின் சுவசெரிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு இலவசமாக அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு ஒரு அம்புலன்ஸ் வண்டி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அம்புலன்ஸ் வண்டியை தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேச மக்களின் அவசர நிலமையின் போது மக்கள் 1990 தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இதன் சேவைகளை 24 மணித்தியாலமும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.