செய்திகள்நுவரெலியாமலையகம்

தலவாக்கலை, வட்டகொடை -தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு 30 பேர் வைத்தியசாலையில் ..?

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 30 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலவாக்கலை, வட்டகொடை மேற்பிரிவு தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 27 பேர் பெண் தொழிலாளர்களும், 3 ஆண் தொழிலாளர்களுமாவர்.

இவர்களில் 13 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் 17 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

க.கிஷாந்தன்

Related Articles

Back to top button