தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம்..

தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா

uthavum karangal

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தலைவமையில் இன்று நடைபெற்றது.

குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் அவர்களின் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய மனித வள அபிவிருத்தி நிதியத்தின் சுமார் ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் சகல வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டு இறைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சத்திவேல் பிரதேசசபை தலைவர் ராஜமணி பிரசாத், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்