மலையகம்

தலாவாக்கலை ஏ7 பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

டெஸ்போட், கிரிவெட்டி வழியாக செல்லும் நுவரெலியா – தலாவாக்கலை ஏ7 பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27ஆம் திகதி அந்த வீதியில் உள்ள பாலத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த வழியாக பாரமான வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் பேருந்து போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் , நேற்று, குறித்த பாலத்தின் திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால், தொடர்ந்தும் எந்த ஒரு வாகனத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

26 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button