மலையகம்

தலாவாக்கலை நீர்த்தேக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலத்தை அடக்கம் செய்ய தீர்மானம் ?

கடந்த வருட இறுதியில் தலாவாக்கலை நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத சடலம் தொடர்பில் ஊடகங்களில் அவதானம் செலுத்தப்பட்டது.

குறித்த சடலம் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணினுடையது என தலவாக்கலை போலீசார் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் குறித்த சடலம் மாதங்கள் கடந்தாலும் அடையாளம் காட்ட இதுவரை யாரும் முன்வராத நிலையில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் அடக்கம் செய்ய தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பெண் காணாமல் போனது பற்றி இதுவரை எந்த முறைப்பாடுகளும் வேறு போலீஸ் நிலையங்களில் குறித்த சடலம் கண்டெடுத்த காலப்பகுதியிழும் பிறகும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button